பிளாஸ்டிக்கிற்கு நிகராக அரிசி வழங்கும் திட்டம் - நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக புதிய திட்டத்தை அந்த தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக்கிற்கு நிகராக அரிசி வழங்கும் திட்டம் - நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்
x
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக புதிய திட்டத்தை அந்த தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா தொடங்கி வைத்தார். இதன்படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அதற்கு நிகரான அரிசியை பெற்றுக் கொள்ளலாம். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி, நகரி பகுதியில்  திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளதாக ரோஜா தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்