40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா - பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்குகிறார்

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா - பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்குகிறார்
x
டெல்லியில் அங்கீகாரம் இல்லா குடியிருப்புகள்  வசிக்கும் மக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பட்டா வழங்க முடிவு எடுத்த மத்திய அரசு, மக்களவையில் அதற்காக சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதனையடுத்து  40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கும் விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நில உரிமை ஆவணங்களை வழங்குகிறார். பிரதமர் மோடி நிகழ்ச்சியையொட்டி அங்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்