குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. லோக் அதிகார், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெற்ற இந்த பேரணியில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாக்பூரில் ஆதரிப்பதாக, அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், மிக பிரமாண்டமான தேசிய கொடி ஒன்றும் எடுத்துச் செல்லப்பட்டது.
Next Story