நித்தியானந்தா மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கடிதம் - இன்டர்போல், சிபிஐக்கு கர்நாடக போலீசார் கடிதம்

நித்தியானந்தாவின் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு இன்டர்போல் அலுவலகத்துக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
நித்தியானந்தா மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கடிதம் - இன்டர்போல், சிபிஐக்கு கர்நாடக போலீசார் கடிதம்
x
நித்தியானந்தாவின் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு இன்டர்போல் அலுவலகத்துக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். கைலாசா என்ற புதிய நாட்டை அவர் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் தனது அருளுரை பேச்சு மூலம், நித்தியானந்தா அடுத்தடுத்த அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க தீவிரம் காட்டி வரும் கர்நாடக போலீசார், இன்டர்போல் மற்றும் சிபிஐக்கு கடிதம் எழுத்தி உள்ளனர். அதில், நித்தியானந்தா மீது, தலைமறைவாக இருக்கும் நபரை கண்டறியும் புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு கோரியுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்