மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி : தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி : தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு
x
மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் பாலியல் பலாத்கார  சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதே போல் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெடித்துள்ள கலவரம் ஆகியவற்றை முன்வைத்து மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடித்ததால், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடர், நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்