ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்
x
திருப்பதியில் கார்த்திகை தீபத்தையொட்டி, ஏழுமலையான் கோயில் பரிமள மண்டபத்தில், மாலை கோயில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார், 100 தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ஜீயர்கள், கோயில் அர்ச்சகர்கள் உட்பட ஏராளமானோர் அகண்ட மண் பாத்திரத்தில் ​​தீபங்களை ஏந்தி, விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்திஎடுத்து வழிபட்டனர். இதனையடுத்து, குலசேகரப்படி, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி, தங்கக் கிணறு, கொடிமரம், யோக நரசிம்மர் சுவாமி சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், கைகளில் தீபங்களை ஏந்தியவாறு 4 மாட வீதிகளில் வலம்வந்த அவர்கள், இறுதியாக கோயில் குளத்தில் கார்த்திகை தீபங்களை விட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்