"2002 வன்முறைக்கும், குஜராத் அரசுக்கும் சம்மந்தமில்லை" - நானாவதி கமிஷன் விசாரணை அறிக்கையில் தகவல்

குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும், அப்போதைய மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நானாவதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 வன்முறைக்கும், குஜராத் அரசுக்கும் சம்மந்தமில்லை - நானாவதி கமிஷன் விசாரணை அறிக்கையில் தகவல்
x
குஜராத்தில் கடந்த  2002 ஆம் ஆண்டு  கரசேவகர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி, கோத்ரா ரயில் நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து  அம்மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஜராத் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி மற்றும் அக்சய் மேத்தா கமிஷனின் அறிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு மாநில அரசிடம் வழங்கப்பட்டது. அது இன்று குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2002ம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும் அப்போது அங்கு ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த குஜராத் அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சரியாக செயல்படாத  காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது Next Story

மேலும் செய்திகள்