விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 48

இந்தியாவின் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கை கோள் உட்பட 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 48
x
நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கை கோள் , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  விண்ணுக்கு செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 576 கி.மீ தொலைவில் இந்த செயற்கை கோள் நிலை நிறுத்தப்படும் என்றும், இந்தியாவின் 50-வது பி.எஸ்.எல்.வி  ராக்கெட் எனவும் பெருமை பெற்றது. மொத்தம் 10 செயற்கை கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட்டில் இந்தியாவின் ரிசாட் 2 பி.ஆர். 1  செயற்கை கோளும் இடம் பெற்றுள்ளது.  628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளானது  மழை, மேகக் கூட்டம் என எதுவாக இருந்தாலும் பூமியை துல்லியமாக படம் பிடித்துக் கொடுக்கும். இதுபோல, பூமிக்கு அடியில் பதுங்கு குழிக்குள் இருந்தாலும் துல்லியமாக படம் பிடிக்கும் என்பதால் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ராணுவத்துக்கு பேருதவியாக இருக்கும். இந்த செயற்கை கோள் தவிர, மேலும் 9 செயற்கை கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்