"நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்" - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது. செப்டம்பர் 7-ஆம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இதுகுறித்து இஸ்ரோ இணைய தளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்