திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் மோதல்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் மோதல்
x
 கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாணவர் அமைப்பை சேர்ந்த ஒரு மாணவரை எஸ். எஃப்.ஐ. அமைப்பை சேர்ந்த  மாணவர்கள் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள மாணவர் அமைப்பினர் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் பல்கலைகழகத்தை கடந்த சென்ற போது உள்ளே இருந்த மாணவர்கள்  கல்வீசி தாக்கியதில் சிலர் காயமடைந்தனர். இதை கண்டித்து அங்கு மாணவர்கள்  மறியலில்  ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா அங்கு வந்து,  தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என்று உறுதிபட தெரிவித்தார். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.Next Story

மேலும் செய்திகள்