"மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெற்றபோது எதிர்ப்பில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

எஸ்.பி.ஜி பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த சட்டம் அதிமுகவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெற்றபோது எதிர்ப்பில்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
x
மக்களவையில் எஸ்பிஜி பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் மீது உரையாற்றிய திமுக எம்.பி ஆ.ராசா,சோனியாகாந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி. ஜி பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதை, மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை தொடர்ந்து பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், எஸ்பிஜி பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு  ஆதரவு அளிப்பதாக கூறினார். 

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கழிவறைக்கு செல்லும் போது, அவரது பாதுகாவலர்கள் தனியாக விட்டுவிடுவதாக  கிண்டலாக கூறினார்.  நரசிம்மராவ், ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர், தேவகவுடா,மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட போது எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை என்று கூறினார். சோனியாகாந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெற்றதற்கும் மட்டும் எதிர்ப்பு எழுத்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்