2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்கள், நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முன்வைத்து வாதிட்டார்.  வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசிக்க மேலும் 2 நாட்கள் அனுமதித்ததுடன், விசாரணையை  9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்