கோவாவில் சர்வதேச திரைப்பட தொடக்க விழா : கோலாகலமாக துவங்கிய திரைப்பட விழா

கோவாவில் சர்வதேச திரைப்பட தொடக்க விழா, இன்று கோலாகலமாக துவங்கியது.
கோவாவில் சர்வதேச திரைப்பட தொடக்க விழா : கோலாகலமாக துவங்கிய திரைப்பட விழா
x
50-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம் தேதி வரை, 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விழாவில், திரைப்படத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிக்கிறது. ரஜினிகாந்துக்கு ''ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி விருது'' வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. இதில், 26 இந்திய திரைப்படங்கள் உள்பட 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பார்த்திபனின் ''ஒத்த செருப்பு'' மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்கள் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்