ரூ.47 லட்சம் மதிப்பிலான துணி பண்டல்களை கொள்ளையடித்த கும்பல் : 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

சித்தூர் அருகே லாரியில் இருந்து 47 லட்ச ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.47 லட்சம் மதிப்பிலான துணி பண்டல்களை கொள்ளையடித்த கும்பல் : 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
x
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் இருந்து துணி பண்டல்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி பழுதான நிலையில் அங்கு வந்த ஒரு கும்பல் லாரி ஓட்டுநர் நாகேஷூக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் லாரியில் இருந்த 47 லட்ச ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்களை எல்லாம் மற்றொரு லாரியில் எடுத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் துணி பண்டல்களை திருடிச் சென்ற கும்பல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த போலீசார், துணி பண்டல்களை கைது செய்ததோடு விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்