உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்
x
ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றுக் கொண்டார். டெல்லி ராஷ்டிரபதிபவனில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2012 ஆண்டு மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போப்டே  நியமிக்கப்பட்டிருந்தார்.   2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்றார். அயோத்தி, ஆதார் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத்தில் 47-வது தலைமை நீதிபதி போப்டே 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23 வரை, சுமார் 17 மாதங்கள் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்