"சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்" : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சாஸ்திர முறைப்படியான வரைப்படம் தயாராகியுள்ளது.
சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில் : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்
x
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்ற அனுமதித்துள்ள நிலையில், அங்கு கோயில் எப்படி அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோயிலை கட்டுவதற்கான கட்டட வரைப்படத்தை கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தயாரித்துள்ளார். இந்த வரைப்படத்தின் அடிப்படையில் பணி தொடங்கப்பட்டால் அது நிறைவடைய மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கட்ட 270 அடி நீளமும் 142 அடி அகலமும் கொண்ட நிலம் போதுமானது என்றாலும், உலகம் முழுவதிலும் இருந்து எல்லா தரப்பினரையும் ஈர்ப்பதற்காக அயோத்தியாவை பெரிய நகரமாக நிர்மாணிக்க வேண்டும் என்பது அவரது கருத்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தங்கும் விடுதிகள், மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்...

ஒருவேளை புதிதாக அமைய உள்ள ராமர் கோயில் கட்டுமான அறக்கட்டளை கோயில் வடிவமைப்பில் மாற்றம் எதுவும் செய்ய விரும்பினால் சாஸ்திர முறைப்படி வடிவமைப்பு மாற்றப்படும் என தெரிவிக்கும் அவர், கோயிலுக்கு வாஸ்து சாஸ்த்திரம் மிகவும் அவசியம் என்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் 50 ரூபாய்க்கு கொண்டு வரப்பட்ட கற்களின் விலை தற்போது 700 ரூபாயை எட்டியுள்ளதாக நினைவு கூறும் அவர், இப்போதே பணியை தொடங்கினால் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார். இதுவரை 20 கோடி ரூபாய் மதிப்பில் ராமர் கோயில் கட்ட பணியில் 40 சதவீதம்  நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார், சந்த்ரகாந்த்


Next Story

மேலும் செய்திகள்