வரும் 17-ம் தேதி அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் : ஆலோசனைக்கூட்டத்திற்கு வெங்கையாநாயுடு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்,வரும் 17-ம் தேதி எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 17-ம் தேதி அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் : ஆலோசனைக்கூட்டத்திற்கு வெங்கையாநாயுடு அழைப்பு
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்,வரும் 17-ம் தேதி எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18-ம் தேதி முதல் டிசம்பர் 13 வரை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் 17-ம் தேதி தனது இல்லத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு வெங்கையாநாயுடு  அழைப்பு விடுத்துள்ளார். அதில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்