ஆளுநருடன் மாலை 5 மணிக்கு சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று, ஆட்சி அமைக்க உரிமை கோர, சிவசேனா முடிவு செய்துள்ளது.
ஆளுநருடன் மாலை 5 மணிக்கு சிவசேனா தலைவர்கள் சந்திப்பு
x
முதலமைச்சர் பதவி தொடர்பாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த  மகாராஷ்டிராவில், பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என பா.ஜ.க. தலைவர்கள் ஆளுநரிடம் நேரில் சென்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாரு ஆளுநர்  அழைப்பு விடுத்த நிலையில்   சிவசேனா தலைவர்கள் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்திக்க உள்ளனர். மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நிகழும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்