காற்றாலை மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறேன் - சரிதா நாயர்

காற்றாலை மோசடி வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, நடிகை சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
x
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரிதா நாயர் மீது காற்றாலை அமைத்து தருவதாக கூறி, மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி கண்ணன் தீர்ப்பளித்தார். அதில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி செய்த்து உறுதிபடுத்த பட்டு இருப்பதாகவும் இவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் 3 பேருக்கும், 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்திரவிட்டார். இதனிடையே சரிதா நாயர் , பிஜூ ராதாகிருஷ்ணன் மேலாளர் ரவி ஆகிய 3 பேரும் தண்டணையை நிறுத்தி வைக்க கோரி நீதிபதியிடம் மனு அளித்ததை தொடர்ந்து மூன்று பேரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், தம்மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்