சவூதி அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

2 நாள் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அப்துல் மோஷின் அல்-பெட்லேவை சந்தித்து பேசினார்.
சவூதி அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
2 நாள் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அப்துல் மோஷின் அல்-பெட்லேவை சந்தித்து பேசினார்.  இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு நம்பகமான மற்றும் முக்கியமான நாடு சவூதி அரேபியா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நிலையான கச்சா எண்ணெய் விலையே, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான காரணி என தெரிவித்தார். இந்திய எரிசக்தி தேவையில் 18 சதவீதத்தை, சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்வதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் நம்பகமான நாடு எனவும் பாராட்டினார். தற்போது, இந்த உறவு, இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதில் சவூதி அரேபியாவின் முதலீடு என்ற அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் மோடி கூறினார். மேலும், இரண்டு நாடுகளுமே ஒரே மாதிரியாக அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவை எனவும் தீவிரவாத எதிர்ப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்