மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பம்...
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக பா.ஜ.,வும், சிவசேனாவும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், சிவசேனா ஆதரவை நாடியது. இந்த நிலையில், ஆட்சியில் சமபங்கு கேட்டதுடன், இரண்டரை ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் சிவசேனை நிபந்தனை விதித்தது. இதனால் மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் மற்றும் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் திவாகர் ரோட்டே ராஜ், ஆகியோர் ராஜ்பவனுக்கு தனித்தனியாக சென்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரை சந்தித்தனர்.அப்போது அவர்கள் ஆட்சி அமைக்க உரிமைகோரியதாக தெரிகிறது.
Next Story

