கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் : நிபந்தனைகளை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் :  நிபந்தனைகளை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ஜாமீன் கோரி சிவக்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் சிவக்குமாருக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. எனினும், சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்யக்கூடாது, வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது, வழக்கு விசாரணைக்கு எப்பொழுது அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,  25 லட்சம் பிணைத் தொகையாக கட்ட வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்