காஷ்மீர் எல்லையில் தொடரும் தாக்குதல்கள்...

காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன.
காஷ்மீர் எல்லையில் தொடரும் தாக்குதல்கள்...
x
காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து அக்கிராம மக்கள் நிர்கதியாய் நிற்கின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், எல்லையில் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், பாதிக்கப்படுவது என்னவோ, எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள் தான். அங்குள்ள உரி மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கின்றன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கும் தங்களுக்கு, எந்த உதவியும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட கிராம மக்கள். சின்னஞ்சிறு  குழந்தைகளை வைத்திருக்கும் தங்களுக்கு, அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க பதுங்கு குழிகளோ, கூடாரங்களோ இல்லை என்று குமுறுகின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் பலமுறை போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, தாக்குதல் நடத்தியுள்ளதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிராம மக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதால், இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என அதிகாரிகள் கூறினாலும், நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள தங்களை காப்பது அரசின் கடமை என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்