கைதிகளின் உயிரிழப்பை தடுக்க கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை

கேரள காவல் நிலையங்களில் கைதிகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்துவதற்காக எட்டு நிபந்தனைகளை கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கைதிகளின் உயிரிழப்பை தடுக்க கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை
x
கேரள காவல் நிலையங்களில் கைதிகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்துவதற்காக எட்டு நிபந்தனைகளை கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சிறைக்கு கொண்டு செல்லும் முன்பு உடலில் காயம் இருந்தால், அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சிறையில் கைதிகளை அனுமதித்த 24 மணி நேரத்திற்குள் சிறையில் இருந்து அறிக்கை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சொந்த அலுவல்களுக்காக காவல் துறை வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்