கேரளாவை உலுக்கிய சயனைடு பெண் : ஜோளியை கோவை அழைத்து வந்து விசாரிக்க முடிவு

கேரளாவை உலுக்கிய சயனைடு பெண் ஜோளியை, கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க கேரள போலீஸ் முடிவு செய்துள்ளது.
கேரளாவை உலுக்கிய சயனைடு பெண் : ஜோளியை கோவை அழைத்து வந்து விசாரிக்க முடிவு
x
கோழிக்கோடு அடுத்து கூடத்தாயி கிராமத்தில் கணவர், மாமியார் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த தொடர் கொலைகள் குறித்து சமீபத்தில் தான் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணைக்கு பின் ஜோலி கைது செய்யப்பட்டார். கணவரின் சொத்து மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக 6 கொலைகளை செய்ததாக ஜோளி கொடுத்த வாக்குமூலம் கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.குடும்பத்தினரை கொல்வதற்கு ஜோளி பயன்படுத்திய சயனைடு விஷம் கோவையில் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, சயனைடு பெண் ஜோளியை கோவை அழைத்து வந்து விசாரிக்க கேரள போலீஸ் முடிவு செய்துள்ளது. கோவையில் சயனைடு விஷம் வாங்க உதவிய அந்த நபர் யார்? என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்