பீகாரை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் நால்வர் கைது - துப்பாக்கிகள், குண்டுகள், கத்தி, நகை, செல்போன் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து வந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் நால்வர் கைது - துப்பாக்கிகள், குண்டுகள், கத்தி, நகை, செல்போன் பறிமுதல்
x
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே  துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து வந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமாநல்லூர் பகுதிகளில் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதாக அதிக புகார்கள் வந்தன. இந்நிலையில், தனிப்படை போலீசாரின் வேட்டையில் பீகாரை சேர்ந்த முஸ்தபா அன்சாரி, சந்தன் குமார் மற்றொரு சந்தன்குமார், நாவர் பாட்சா ஆகியோர் சிக்கினர். மேலும், நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த  பிரதீப்குமார், ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அபி என்கிற ஸ்ரீபதி  ஆகியோரும் சிக்கினர். 


Next Story

மேலும் செய்திகள்