பெரும்பான்மைவாதம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் - ரகுராம் ராஜன்

மத்திய பா.ஜ.க. அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பிளவுபடுத்தும் பெரும்பான்மை கொள்கைகளால் நாட்டுக்கு தீங்குகள் ஏற்படும் என இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
பெரும்பான்மைவாதம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் - ரகுராம் ராஜன்
x
பெரும்பான்மைவாதம்  நாட்டை அடர் இருட்டுக்கும், நிச்சயமற்ற பாதைக்கும் அழைத்து செல்வதாக ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மைவாதிகளால் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க இயலாது என்றும், மாறாக அவர்கள் தங்களது எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்க நினைக்கும் தேசிய ஒருமைப்பாடு நாட்டை சிதறடித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். பெரும்பான்மை தேசியவாதம் உள்ளார்ந்த பிரிவினையை தன்னகத்தே கொண்டது என்றும் அவர் எச்சரித்துள்ளார். உள்ஒத்திசைவு மற்றும் பொருளாதார வளர்ச்சி தான் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும், ஒருபோதும் பெரும்பான்மை வாதம் அந்த பணியை மேற்கொள்ள உதவாது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் உதவும் என்றும், அதே நேரத்தில் அது நாட்டை அடர் இருட்டுக்கும், தெளிவற்ற பாதைக்கு அழைத்து செல்லும் என்றும் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்