பொருளாதார வளர்ச்சிக்கு சினிமா வசூலே சான்று என்ற கருத்தை திரும்பப் பெற்றார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
பொருளாதார மந்தநிலை இல்லை என்பதற்கு ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் 120 கோடி ரூபாய் வசூலே உதாரணம் என தான் கூறிய கருத்தை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் திரும்ப பெற்றுள்ளார்.
பொருளாதார மந்தநிலை இல்லை என்பதற்கு, ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் 120 கோடி ரூபாய் வசூலே உதாரணம் என தான் கூறிய கருத்தை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் திரும்ப பெற்றுள்ளார். இந்திய பொருளாதார மந்த நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காந்தி ஜெயந்தி அன்று வெளியான 3 படங்கள் 120 கோடி ரூபாய் வசூலாகிறது என்றால் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு சினிமா வசூலே சான்று என கூறினார். இந்த கருத்து கடும் சர்ச்சையான நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்தை திரும்ப பெறுவதாக ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Next Story