சூப்பர் மார்க்கெட்டில் திருட முயற்சி - கடையின் மெயின் கதவை உடைக்க முடியாமல் தவிப்பு

புதுச்சேரி அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருட வந்த கொள்ளையர்கள்,கடையின் பூட்டை உடைக்க முடியாததால், வெளியே இருந்த குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரீமை சுவைத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சூப்பர் மார்க்கெட்டில் திருட முயற்சி - கடையின் மெயின் கதவை உடைக்க முடியாமல் தவிப்பு
x
புதுச்சேரி அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருட வந்த கொள்ளையர்கள், கடையின் பூட்டை உடைக்க முடியாததால் வெளியே இருந்த குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரீமை சுவைத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  தவளக்குப்பம் பகுதியில் தாமோதரன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் முன்பக்க கிரில் பூட்டு உடைக்கப்பட்டு, நுழைவாயிலில் இருந்த சிசிடிவியும் சேதப்படுத்தப்படிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தவளக்குப்பம்  போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணினியில் பதிவான சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில், கடை வளாகத்துக்குள்  புகுந்து 4 கொள்ளையர்கள், முன்பக்க  கிரில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, மெயின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.  முயற்சி தோல்வி அடையவே, அங்கு இருந்த குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீமையும் ருசித்து சாப்பிட்டுவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்