காஷ்மீர் குறித்த உண்மை மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா

காஷ்மீர் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் கையிலேயே அதன் வரலாற்றை திருத்தி எழுதும் நிலை இருந்ததால், அதன் உண்மை மக்களுக்கு இதுவரை மறைக்கப்பட்டு இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்த உண்மை மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
டெல்லியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், காஷ்மீர் வரலாற்றை மாற்றி எழுதவும், அது குறித்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நேரம் வந்து விட்டதாக தெரிவித்தார். 370வது சட்டப்பிரிவு குறித்து நிறைய வதந்திகள் உலா வருவதாகவும் அது குறித்து விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். காஷ்மீரில் இருந்து பண்டிட் இன மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும், அங்குள்ள சுஃபி துறவிகளின் கலாசாரம் அழிக்கப்பட்டபோதும், மனித உரிமை காவலர்கள் எங்கே போனார்கள் என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார். சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே விவாதப் பொருளாக இருந்து வரும் காஷ்மீர் குறித்து தவறான தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்