இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்துகுள்ளானது

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு இன்று ரஸ்டம் - 2 என்ற அதி நவீன ஆளில்லா விமானத்தை சோதித்து பார்த்தது.
x
ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு  இன்று ரஸ்டம் - 2 என்ற அதி நவீன ஆளில்லா விமானத்தை சோதித்து பார்த்தது.  கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் ஏரோனாட்டிக்கல் மையத்தில் இருந்து இந்த சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். எதிர்பாராத விதமாக தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு ரஸ்டம் - 2 ஜோடி சிக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள  விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்