பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் : புனிதம் கெட்டு விடும் என்பதால் அனுமதி மறுப்பு என தகவல்

கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வந்தவர் பா.ஜ.க. எம்.பி. பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் : புனிதம் கெட்டு விடும் என்பதால் அனுமதி மறுப்பு என தகவல்
x
கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதி மக்களவை உறுப்பினர் நாராயணசாமி. பா.ஜ.க.வை சேர்ந்த இவர், தும்கூர் மாவட்டத்தில் உள்ள  கொல்லரஹட்டி கிராமத்தில் குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சென்றுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கிராமத்தை பார்வையிடுவதற்காக சென்ற நாராயணசாமி எம்.பி.யை, கிராம மக்கள் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.  

கோவில் இருப்பதால் பட்டியல் சமுதாயத்தினர் நுழைய அனுமதி இல்லை என்று கூறி அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தனர். கோவிலுக்கு வரவில்லை, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தான் வந்ததாக விளக்கம் அளித்தும் கிராம மக்கள் அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார். கர்நாடக மாநில போலீசார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பு வருவதால், கர்நாடகாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்