கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டம்... மதுராவில் தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டம்... மதுராவில் தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி
x
நாடு முழுவதும் உள்ள 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், மக்களவை உறுப்பினர் ஹேமா மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர். கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளை தாக்கும் புருசெல்லோசிஸ் நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, பசுக்களையும் கன்று குட்டிகளையும் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்