மந்த நிலையின் ஆழ்ந்த நாட்டின் பொருளாதாரம் - பிரியங்கா காந்தி
நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையின் ஆழ்ந்த படுகுழியில் வீழ்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், மந்தநிலையின் ஆழ்ந்த படுகுழியில் வீழ்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, ஒவ்வொருவர் தலையிலும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ, சரக்கு வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்மறை வளர்ச்சி விகிதம் உற்பத்தி மற்றும் வாகன போக்குவரத்து துறையில் மட்டுமல்லாது சந்தையின் நம்பிக்கையை சரிவடையச் செய்துள்ளதாகவும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போது விழித்துக் கொள்ளுமோ? என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story