கடல் வழியாக நுழைந்துள்ள தீவிரவாதிகள் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்படும்-இந்திய ராணுவம்

தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென் மண்டல ராணுவ தளபதி சைனி தெரிவித்துள்ளார்.
கடல் வழியாக நுழைந்துள்ள தீவிரவாதிகள் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்படும்-இந்திய ராணுவம்
x
தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென் மண்டல ராணுவ தளபதி சைனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா, பாக் கடலோர எல்லையான Sir Creek பகுதியில் ஏராளமான படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம், பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாக தெரிவித்தார். இந்த எச்சரிக்கையை உளவுத்துறையும் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்ட தென் மண்டல ராணுவ தளபதி சைனி, இந்தியாவின் தென் மாநிலங்களில் தாக்குதல் நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக கூறினார். எனினும் தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் ராணுவம் எடுத்துள்ளதாகவும், தீவிரவாதிகள் விரைவில் பிடிப்படுவார்கள் என்றும் சைனி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்