2 ஆண்டுகளில் நாட்டின் வனப்பரப்பு 8 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் வனப்பரப்பு 8 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளில் நாட்டின் வனப்பரப்பு 8 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு
x
வனப்பரப்பு குறைவதை தடுப்பது தொடர்பாக ஐ.நா. அமைப்பின் சார்பில் 14 நாடு உறுப்பு நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் வனப்பரப்பு 8 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும் வரும் 203 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடியே 60 லட்சம் ஹெக்டேர் நிலங்களின் வளத்தை மீள் உருவாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இந்த அமைப்பின் தலைவராக உள்ள இந்தியா, அமைப்பின் இலக்கை எட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சுற்றுச்சூால் மற்றும் காலநிலை மாறுபாடு, பல்லூயிர் தன்மை மற்றும்  நிலங்களின் வளத்தை பாதிப்பதாக பிரதமர் தெரிவித்தார். நிலங்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலைப்படும் நாம் அனைவரும், நீர்மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மண்வளத்தை பாதிக்கும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தமது அரசு உறுதியுடன் உள்ளதாகவும், உலகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் சரியான தரூணம் இது என்றும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்