இன்று ஆசிரியர்கள் தினம் - குடியரசு தலைவர் வாழ்த்து

இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று ஆசிரியர்கள் தினம் - குடியரசு தலைவர் வாழ்த்து
x
இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.நாட்டை வலிமையாக்க நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர் சமுதாயம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்