பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரம் : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவலை

நாட்டின் பொருளாதாரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரம் : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவலை
x
கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் ஆக உள்ளதை அவர் கூட்டிக்காட்டியுள்ளார். பொருளதாரத்தில் இந்தியா விரைவான வளர்ச்சி எட்டக்கூடிய கூடிய நாடு என்றும், ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பண மதிப்பு இழப்பு  ஜிஎஸ்டி அமல் உள்ளிட்ட நடவடிக்கையே  இதற்கு காரணம் என தெரிவித்துள்ள மன்மோகன்சிங், ஆட்டோமொபைல் துறையில் சுமார் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு பொருளாதாரத்தை சீர்படுத்தும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்