பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குஜராத் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ சதித் திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோ அல்லது தீவிரவாதிகள் சிறு படகுகள் மூலம் நுழைய உள்ளதாக, புலனாய்வுத்துறை அளித்த எச்சரிக்கையை அடுத்து குஜராத் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
x
கட்ச் வளைகுடா மற்றும் சர்கீரிக் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் அல்லது தீவிரவாதிகள் சிறிய படகுகளில் நுழைய இருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. இந்த கமாண்டோக்கள் நீருக்கு அடியில் இருந்து கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடு பயிற்சி பெற்றவர்கள் என கூறுப்படுகிறது. குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து குஜராத் கடலோர பகுதியில் கடலோரக் காவல்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், குஜராத்தில் உள்ள முந்த்ரா மற்றும் கண்டாலா துறைமுகங்களில் உள்ள கடலோர காவல் படை மற்றும் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகங்களில் உள்ள படகுகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக அதானி துறைமுக கழகம்,  கப்பல் முகவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களது கப்பல்கள் மற்றும் படகுகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் நடந்தால் அதை உடனடியாக கடற்படை கட்டுப்பாடு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது. கடந்த வாரம் குஜராத்தின் கூச் கடற்கரை பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான  2 ஆளில்லா படகுகளை எல்லை பாதுகாப்பு படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்