மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு

ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு
x
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியது.

இதன்படி, கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி ரூபாய் மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்