கேரளாவில் போலீசாரை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

காவல் துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் மற்றும் உடனிருந்த அதிகாரியை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கேரளாவில் போலீசாரை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
கேரளாவில் வாகனங்களை ஓட்டுவோர் சீட் பெல்ட் கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்படுகிறது. அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், சீட் பெல்ட் அணியாமல் காவல் துறை வாகனத்தில் இருவர் சென்றனர். இதனைக் கண்ட இளைஞர் ஒருவர், போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி அவர்களை சீட் பெல்ட் அணிய வைத்தார். அந்த இளைஞனிடம் போலீசார் வீராப்போடு பேசினாலும், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டதால், இருவரும் சீட் பெல்ட் அணிந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தைரிய இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.

Next Story

மேலும் செய்திகள்