உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி

உ.பி-யில் 10 பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட உம்மா என்ற கிராமத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 - வது முறையாக மீண்டும் சென்று சந்தித்தார்.
உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி
x
உ.பி-யில் 10 பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட உம்மா என்ற கிராமத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 - வது முறையாக மீண்டும் சென்று சந்தித்தார். இங்குள்ள சோன்பத்ரா மாவட்டம் உம்மா என்ற கிராமத்தில் கடந்த ஜூன் 17 ம் தேதி இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த கலவரத்தில் பழங்குடியின மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் காயம் அடைந்திருந்தனர். கடந்த முறை உம்மா கிராமத்திற்கு சென்றபோது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி, இந்த முறை, எளிதாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரியங்கா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்