ஜம்மு- காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம்

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜம்மு- காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம்
x
ஜம்மு- காஷ்மீரிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்றவர்களை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்த பின்பே மசூதிக்குள் செல்ல அனுமதித்னர். ஜம்முவில் உள்ள மசூதியொன்றில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.  

ஸ்ரீநகரில் கடைகள் அடைப்பு - வெறிச்சோடிய சாலைகள்

ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடைகள் அனைத்தும் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் எதுவுமின்றி ஸ்ரீநகர் வெறிச்சோடி காணப்படுகிறது. 

நெல்லை

நெல்லை மாநகர் பகுதியில் 8 இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலப்பாளையம் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், ஜின்னா திடல் உள்ளிட்ட இடங்களில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். 

நாகூர்

நாகை மாவட்டம் நாகூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுமையா கார்டனில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

கடலூர்

கடலூர் மஞ்சைநகரில் உள்ள நகர அரங்கில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் பக்ரீத் பெருநாள் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்