கேரள மழை வெள்ளத்திற்கு 72 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை

கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேரள மழை வெள்ளத்திற்கு 72 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை
x
கேரளாவில் கன மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்கள் பெரும் அவதிபடும் நிலையில், அவர்களை மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இரண்டரை லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.  

பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம் - கண்ணூர் இடையிலான இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் - மங்களூரு எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. வடமாநிலங்களுக்கு செல்லும் 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கனமழை குறித்து புதிதாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் ஏற்கெனவே அறிவித்தபடி, 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் நீடித்து வருகிறது. கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேரள அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்