கேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை

கேரள மாநில வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை
x
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பெரும் பேரழிவு ஏற்படுத்துள்ளதாக கூறினார். வயநாட்டின் புத்துமலை பகுதி கடுமையாக பாதிக்ககப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மழைக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். ஆயிரத்து 551 நிவாரண முகாம்களில் சுமார் 2, லட்சத்து 27 ஆயிரம்  பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மழை குறைந்துள்ள போதிலும் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்பும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்