"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்​பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.
x
காவிரியில், மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் அளித்த ஆய்வறிக்கைகளை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய  மதிப்​பீட்டுக்குழு விரிவாக ஆய்வு செய்தது. இதுதொடர்பாக இருமாநில அரசுகளிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, தற்போது உள்ள திட்டப்படி, நிதி வழங்குவதில் உள்ள விதிமுறைகளை திருத்த அனுமதிக்க முடியாது என அந்த குழு, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தற்போது உள்ள திட்டப்படி செயல்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அதுகுறித்து இருமாநில அரசுகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இருமாநிலங்களும் இணக்கமான முடிவை எட்டிய பின்னர் டேம் ஆப் ரெபரன்ஸ் எனப்படும் விதி திருத்தம் குறித்து முடிவு செய்யலாம் என, மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் நிபுணர்களைக் கொண்ட மதிப்பீட்டு குழு பரிந்துரைத்துள்ளது. அணைக்கட்டுவதற்கான மாற்று இடம் மற்றும் அணையின் உயரம் குறித்து விரிவாக விவாதித்து உரிய முடிவுக்கு எடுக்க வேண்டும் என்றும்,

அணைக்கட்ட தேவையான வனநிலம் மற்றும் வனவிலங்கு சரணாலய பகுதிகள் 4 ஆயிரத்து 996 ஏக்கர் தேவைப்படுவதை குறைத்து, தேவையான நிலம் மட்டும் எடுக்கும் வகையில் மாற்று திட்டம், 2013 ஆண்டு சட்டப்படி, கையகப்படுத்தும் நிலத்துக்கு வெளிப்படையான, நியாயமான இழப்பீடு வழங்குவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து நிபுணர் குழு விளக்கம் கேட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்