ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : காங்கிரஸ் கண்டனத்திற்கு அக்கட்சி எம்.பி. எதிர்ப்பு

ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : காங்கிரஸ் கண்டனத்திற்கு அக்கட்சி எம்.பி. எதிர்ப்பு
x
ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புபனேஸ்வர் காலிட்டா தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தற்கொலை செய்துகொள்வது போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை கட்சியை அழிக்க முயற்சிப்பதாகவும், இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும்  புபனேஸ்வர் காலிட்டா  குறிப்பிட்டுள்ளார்.  அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புபனேஸ்வர் காலிட்டா தமது ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். 
 


Next Story

மேலும் செய்திகள்