புதுச்சேரியில் துப்பாக்கி முனையில் பண பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் துப்பாக்கி முனையில் பண பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
x
சென்னையை சேர்ந்த சிவா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா  சென்றுள்ளனர். அங்கு அனிச்சங்குப்பம் பகுதியில் அவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோர் தங்களை போலீஸ் என கூறி துப்பாக்கியை காட்டி  மிரட்டி 7 செல்போன் மற்றும் 750 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்ததால் தீவிர விசாரணை நடக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்