மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை - ரயில் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் முடக்கம்

மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் சந்திப்பில் இருந்து ரயில்கள் இயக்கம் கணிசமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை - ரயில் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் முடக்கம்
x
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தலைநகர் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் சந்திப்பில் இருந்து ரயில்கள் இயக்கம் கணிசமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். 12 தொலை தூர ரயில்கள் முற்றிலுமாகவும், 6 ரயில்கள் குறிப்பிட்ட தொலைவுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழை, நீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஆப்டா, ஜீட் ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கிப் போய் உள்ளது. இதனிடையே இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 3 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு  :மகாராஷ்டிர மாநிலத்தில்  பெய்து வரும் கனமழையால், பெல்காம் உள்ளிட்ட வட கர்நாடகாவில் உள்ள 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இங்கு, மீட்பு பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, குடகு மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை, ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்