காஷ்மீர் மக்கள் மனதில் மத்திய அரசு அச்சத்தை விளைவிக்கிறது - மத்திய பாஜக அரசு மீது காங். மூத்த தலைவர்கள் புகார்

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனதில், மத்திய அரசு அச்சத்தை விதைத்துள்ளதாக, கூறி, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மக்கள் மனதில் மத்திய அரசு அச்சத்தை விளைவிக்கிறது - மத்திய பாஜக அரசு மீது காங். மூத்த தலைவர்கள் புகார்
x
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, கரண்சிங் ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், அமர்நாத் யாத்ரீகர்களை மத்திய அரசு திரும்ப கூறி வெளியிட்ட அறிவிக்கை கவலையளிப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், யாத்ரீகர்களும் பேருந்து நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று இதற்கு முந்தைய அரசுகள் எதுவும் சொல்லாத நிலையில், இன்றைய முடிவு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத் கூறினார். 
இதுபோல, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் மத்திய பாஜக அரசு  மீது குற்றச்சாட்டுகளை தெரிவிததனர். 
 


Next Story

மேலும் செய்திகள்